மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் கொக்குவில் ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ பெருவிழா நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.
வருடாந்தத் திருவிழாவின் இரண்டாம் நாளையிட்டு இன்று வெள்ளிக்கிழமை பாற்குடப் பவனி நடைபெற்றது.
கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் கோவிலிலிருந்து ஆரம்பமாகிய பாற்குடப் பவனி, வீரமாகாளி அம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.
ஓம் சக்தி ஓம் பராசக்தி என உச்சரித்தவாறு நூற்றுக்கணக்கான அடியார்கள் தமது சிரசினில் பால்குடங்களை சுமந்துவந்து அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
பாலாபிஷேகத்தினை தொடர்ந்து அலங்கார பூசைகள் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை அன்னையின் சடங்குற்சவ பெருவிழா எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் தீ மிதித்தல் மற்றும் பள்ளயத்துடன் இனிதே நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது