
மட்டக்களப்பு கிரான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக பெரு விழா
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கிரான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பஷ பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் பெரு விழாவை முன்னிட்டு, நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் சிவன் அம்பாள், ஸ்ரீ மஹாலஷ்மி, ,சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், ஸ்ரீவைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு எண்ணெய்காப்பு சார்த்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இன்று புதன்கிழமை காலை 9:32மணி தொடக்கம் 10:32 மணி வரையுள்ள சுபமுகூர்த்த நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பிரதம குரு சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் சிவாகம கலாநிதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையிலான சிவாச்சாரியார்களினால் மகா கும்பாவிஷேகம் நடாத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெறும் .
