
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கிரான் தொப்பிக்கலை பிரதான வீதி-கிரான் பாலம் கடந்த பல நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து தடைப்பட்டு இருந்தது
மக்களின் நாளாந்த போக்குவரத்துக்காக கிரான் பிரதேச செயலகத்தில் இயந்திர படகு சேவை இடம்பெற்று கொண்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை தொடக்கம் படிப்படியாக வெள்ள நீர் குறைவடைந்து அப்பகுதியில் மக்களின் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
அத்துடன் வெள்ளத்தினால் மூழ்கிய தமது வயல் நிலங்களை இன்றுதான் தாங்கள் வந்து பார்வையிட்டதாகவும் கடந்த பல நாட்களாக வெள்ளத்தினால் தரை வழிபாதை தடைபட்டதினால் வயலினை வந்து பார்வை இட்டு செல்ல முடியாது இருந்ததாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்
