மட்டக்களப்பு – களுதாவளை மகா வித்தியாலயத்தில் “நெருப்பாற்றில் நீந்துவோம்” எனும் தலைப்பில் கருத்தரங்கு

 

சமூக ஊடக ஆர்வலரும்,சமூக தமிழ்ப்பற்றாளரும் , தன்னம்பிக்கையைக்கு சிறந்த உதாரணமாக விளங்கும் Motivational Speaker ஆன திரு. ஜூட் அஜித் அன்டனி (Jude Ajith Antony) நெருப்பாற்றில் நீந்துவோம் எனும் தலைப்பில் இன்று வியாழக்கிழமை காலை 11:00 மணிக்கு மட்டக்களப்பு  களுதாவளை மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் மாணவர்களுக்கு உரையாற்றினார்

வித்தியாலய அதிபர் சத்தியமோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வித்தியாலய பிரதி அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பழைய மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வின் போது திரு.ஜூட் அஜித் அன்டனிக்கு பொன்னாடை போர்த்தி , பாடசாலை சமூகத்தினால் நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்