மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் விபத்து!

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடி பகுயில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

உணவுகள் தயாரித்து உணவகங்களுக்கு விநியோகம் செய்யும் காத்தான்குடியை சேர்ந்த நபரொருவர் இன்று காலை முச்சக்கரவண்டியில் உணவுகளை எடுத்துச்சென்று கொண்டிருந்த வேளை முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்புறம் சென்று மோதியுள்ளார்.

இதனால் முச்சக்கரவண்டியின் முன்புறம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.