மட்டக்களப்பு – ஈச்சந்தீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ சடங்கு பெருவிழா

மட்டக்களப்பு – ஈச்சந்தீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ சடங்கு பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

அதன்படி இன்று பால்குட பவனியும் அபிஷேகமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிய இவ் உற்சவ பெருவிழாவானது எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையும் என்பதனையும் அடியார்களை இவ்வருடாந்த உற்சவத்தில் கலந்து கொண்டு கண்ணகி அம்மனின் அருள் பெறுமாறும் ஆலய நிர்வாக சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.