
மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் பாதயாத்திரை
மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் பாதயாத்திரை இன்று சனிக்கிழமை ஆரம்பமானது
மட்டக்களப்பு நகரிலிருந்து, வவுணதீவு ஊடாகவும், செங்கலடியில் இருந்து கரடியனாறு ஊடாகவும், இன்று காலை 5 மணியளவில் ஆரம்பமாகி ஆயித்தியமலை நோக்கி பாதயாத்திரை இடம்பெற்றது.
நாளை ஞாயிற்றுக்கிழமை இறுதிநாள் கூட்டுத் திருப்பலி காலை 7 மணியளவில் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.
