
மட்டக்களப்பில் 243வது இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர் தின கொண்டாட்டம்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு 243வது இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இராணுவ படைப்பிரிவின் பிரிகேடியர் கொமாண்டர் சந்திம குமாரசிங்க தலைமையில் பாலமீன்மடு கலங்கரை விளக்கிற்கு (Light House) அருகில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரெட்ண கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக அம்பாறையிலுள்ள 24வது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திர ஸ்ரீ கலந்து கொண்டார். இதில் பிரதம அதிதி உள்ளிட்ட சிறப்பு அதிதிகள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் நடன கலைஞர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றிருந்தது.
அதிதிகளினால் கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறார்களுக்கு விசித்திர பொம்மலாட்ட கலைஞர்களால் இனிப்பு வகைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுவர்களை மகிழ்விக்கும் முகமாக சிறுவர் பூங்காவில் பல்வேறு விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மாலை வினோத விளையாட்டுக்கள் மற்றும் இசை நிகழ்ச்சி என்பன இடம்பெற்றன.







மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

