மட்டக்களப்பில் யானை தாக்கி முதியவர் பலி

மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு இலக்கான வயோதிபர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெல்லாவெளி, விவேகானந்தபுரம் பகுதியை சேர்ந்த பிள்ளையான்குட்டி புலேந்திரன் (வயது – 59) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

திக்கோடை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை யாiனை தக்குதலுக்கு இலக்காகி இவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்