மட்டக்களப்பில் மீண்டும் தொடர்மழை : வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீதிகள்

மட்டக்களப்பில் நாளை புதன்கிழமை வரை மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

தற்போது இலங்கையின் தெற்காக காற்று சுழற்சி நிலவிக் கொண்டிருப்பதால் இலங்கையின் தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு பகுதிகளில் மழை கொண்ட காலநிலை தொடர்கின்றது.

தற்போது நிலவிக் கொண்டிருக்கும் காற்று சுழற்சியானது மாலைதீவு கடல் பிராந்தியத்தை நோக்கி மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதன் காரணத்தினால் நாளை வரை மழை காணப்படும்.

தற்போதுள்ள வானிலை அமைப்பின்படி எதிர்வரும் 11ஆம் திகதி முதல் மழைக்கான சாத்தியக்கூறு குறைவடையும் என ஓய்வு பெற்ற சிரேஷ்ட மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்