மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தி தான் அரசியல் செய்கிறார்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி தான் அரசியல் செய்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் பிள்ளையான் மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்கிறார். ஒட்டுக்குழ என்ற ஒன்றை நான் கேள்விப்பட்டேன். இது என்ன வகையான அரசியல்? எமது ஆட்சியில் அனைத்து ஆயுதங்களும் களையப்படும் என அவர் அங்கு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஆதரவாளர்கள் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்