மட்டக்களப்பில் மக்களுக்கு சேவை செய்ய குப்பை ஏற்றும் வாகனத்தில் வந்த தவிசாளர்கள்

இலங்கை தமிழரசுக் கட்சியியை பிரதிநிதித்தவப்படுத்தும் இரண்டு தவிசாளர்கள் இன்று புதன்கிழமை மட்டப்பளப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழ கூட்டத்திற்கு குப்பை அள்ளும் வாகனத்தில் வருகை தந்தனர்

இலங்கை தமிழரசுக் கட்சியின் செங்கலடி பிரதேச சபை தவிசாளர் மு.மரளிதரன் மற்றும் வாழைச்சேனை தாவிசாளர் சுதாகரன் ஆகியோர் ஆகிய இருவருமே இவ்வாறு அபிவிருத்தி குழ கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதுவரையில் தமது சபைகளுக்கான வாகனங்கள் வழங்கப்படவில்லை என்றும் இந்த நிலையில் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் சுற்றுச்சூழல் அமைச்சரின் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள குப்பை ஏற்றிச்செல்லும் வாகனத்தில் தாங்கள் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் தாம் மக்களுக்கு சேவை செய்ய தாங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.