மட்டக்களப்பில் புத்தாண்டை கொண்டாட தயாராகும் மக்கள்: பலத்த பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு தரப்பு

மட்டக்களப்பில் தமிழ் – சிங்கள புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்ற நிலையில் சனிக்கிழமை புத்தாண்டு பிறக்க உள்ளதால் புத்தாடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய பொது மக்கள் நகரங்களில் கூட்டம் கூட்டமாக செல்கின்றார்கள்.

2020ஆம் ஆண்டு முதல் கொவிட் தொற்று பரவல் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாட முடியாத சூழலை எதிர்கொண்டிருந்தனர்.

இம்முறையும் கடுமையான பொருளாதார நெருக்கடியை மக்கள் எதிர்கொண்டுள்ள போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள ஓரளவு ஸ்திரமான அரசியல் சூழ்நிலை காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன.

அந்த வகையில் இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் அதிகளவான மக்கள் தமது தேவைகளின் நிமித்தம் மட்டக்களப்பில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு வருவார்கள் என வியாபாரிகளால் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந் நிலையில் நாடு முழுவதும் புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் மக்கள் எவ்வித இடையூறுகளுமின்றி புத்தாண்டை வரவேற்க பாதுகாப்பு தரப்பில் இருந்து வழங்க வேண்டிய அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

மேலும் 7,500க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனரென பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்