
மட்டக்களப்பில் புகையிரத கடவையின் ஊழியர்கள் ஆர்பாட்டம்
பாதுகாப்பற்ற புகையிரத கடவையின் ஊழியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது தாங்கள் மாதாந்தம் 7500 ரூபா சம்பளம் பெறுவதாகவும் தங்களது மாதந்த செலவு 35000 ரூபாவை விட அதிகம் எனவும் இலங்கையில் வாழ்வதற்கு ஒரு நாளுக்க 250 ரூபா போதுமா என்று ஆர்பாட்டகாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன் அமைதியான முறையில் ஆர்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
தங்களுக்கு நிரந்தர நியமனம் வேண்டியும் சம்பள உயர்வை கோரியும் மட்டக்களப்பில் உள்ள 24 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் பணி புரியும் சிற்றூழியர்கள் இன்று இந்த ஆர்பாட்டத்தை மேற்கொண்டுள்ளதுடன் நாளை திங்கட்கிழமை மாவட்ட ரீதியாக திருகோணமலை, மன்னார், மதவாச்சி போன்ற பகுதிகளில் இருக்கும் சிற்றூழியர்கள் இணைந்து இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


