மட்டக்களப்பில் பாடசாலைகளுக்கு அருகில் தேங்கி நிற்கும் மழை நீர்

மட்டக்களப்பு கல்லடி மட்/விபுலானந்தா பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கடும் மழை காரணமாக வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது.

குறித்த பகுதியில் வீதி சீரமைக்கப்பட்டிருந்த போதிலும் மழைநீர் வழிந்து ஓடுவதற்கான வசதி இல்லாததால் பாதையில் நீர்தேங்கி நிற்பதாகவும், வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுவதாகவும்  இதன் மூலம் டெங்கு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் குறித்த பகுதியால் பயணம் செய்யும் பாடசாலை மாணவர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் பயணிப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் வடிகால் அமைப்பு இல்லாததன் காரணத்தினாலேயே இவ்வாறு நீர் தேங்கி காணப்படுவதாகவும் தங்களுடைய பகுதியில் உரிய முறையில் வடிகால்களை அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் பாடசாலைகளுக்கு அருகில் தேங்கி நிற்கும் மழை நீர்

மட்டக்களப்பில் பாடசாலைகளுக்கு அருகில் தேங்கி நிற்கும் மழை நீர்

மட்டக்களப்பில் பாடசாலைகளுக்கு அருகில் தேங்கி நிற்கும் மழை நீர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்