
மட்டக்களப்பு நாவலடி வாவியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை டிக்டெக் ஒளிப்பதிவினை மேற்கொள்ள சென்ற போது தோணி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் , நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவத்தில் மட்டக்களப்ப்பு சீலாமுனையைச் சேர்ந்த தவசீலன் கிருசாந்தன் (வயது-19) மற்றும் மாமாங்கத்தைச் சேர்ந்த பிரபாகரன் பிருந்தயன் (வயது-18) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோணி சேதமடைந்ததினால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்பொது நால்வர் நீந்தி கரையை அடைந்துள்ளனர் இதில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில் மீனவர்களினால் நாவலடிப் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=b-x7mxk7Sjk
