மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு

மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில், பாதுகாப்பாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்களை, நேற்று வெள்ளிக்கிழமை மாலை,  விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்

பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, குடும்பிமலை பகுதியில், அரங்கலாவ விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த பகுதியில் நிலத்தை தோண்டி, புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்களை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களை வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.