மட்டக்களப்பில் நியமனப் பத்திரம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நியமனப் பத்திரம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் 10 இற்கும் மேற்பட்ட சிகிச்சை குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன இன்று முதலாவது நியமன பத்திரம் தாக்கல் செய்யும் நடவடிக்கை இடம் பெற்றது. மோகன் டிலான் என்பவரின் தலைமையில் முதலாவது நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வற்காக எட்டு பேர் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் நான்கு லட்சத்தி 49,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். மட்டக்களப்பு பட்டிருப்பு கல்குடா ஆகிய 3 தேர்தல் தொகுதிகளில் தேர்தல்கள் இடம் பெற உள்ளன.

442 வாக்கு அளிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வேட்பு மனுத் தாக்கல் நடவடிக்கை ஆரம்பமானதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்