மட்டக்களப்பில் தாலி கட்டிய பாடசாலை மாணவன் : ஒரு வருடமாக மறைத்து வைத்த மாணவி

மட்டக்களப்பில் பாடசாலையில் கல்வி பயிலும் 10 ஆம் வகும்பு மாணவன் ஒருவன் 09 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவனுக்கும் வேறு ஒரு பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிக்கும் இடையே காதல் உண்டான நிலையில் சென்ற வருடம் குறித்த மாணவன் 09 ஆம் தரத்தில் கல்விகற்கும் போது 08 ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவிக்கு இரகசியமாக தங்கத்தில் தாலி கட்டியுள்ளான்.

இதனை ஒரு வருடங்களாக யாரும் அறியாத நிலையில் அண்மையில் பாடசாலை நிகழ்வொன்றில் குறித்த மாணவி கலந்து கொண்ட போது மாணவி எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் இருந்த தாலியை சக மாணவிகள் கண்டுள்ளனர்.

இதையடுத்து சக மாணவிகளால் ஆசிரியையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியிடம் ஆசிரியை கழுத்தை காட்டும் படி கேட்ட போதிலும் மாணவி தயக்கம் காட்டி மறுத்துள்ளார். மாணவியின் நடத்தையால் சந்தேகமடைந்த ஆசிரியை கட்டாயமாக மாணவியின் கழுத்தை பார்த்த போது தாலி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து ஆசிரியை குறித்த மாணவன் மற்றும் மாணவியின் வீட்டில் இது தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்