
மட்டக்களப்பில் தங்கையை 5 மாத கர்ப்பிணியாக்கிய அண்ணன்
மட்டக்களப்பில் தனது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.ஏஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயதுடைய தங்கை ஐந்து மாத கர்ப்பிணியான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
