மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் காரியாலயம் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இக்காரியாலயம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அனுசரணையில் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆதரிக்க தீர்மானித்துள்ள நிலையில் இன்று தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்