மட்டக்களப்பில் சிறுவர்களுக்கான மாற்றுப்பராமரிப்புத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

“கிழக்கு மாகாணத்தில் மாற்றுப்பராமரிப்பு மற்றும் அதற்கான குடும்பங்களை வலுப்படுத்தல்” திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குறித்த திட்டம் தொடர்பான அறிமுகத்தை செரி (CERI) நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் வி.தர்ஷன் வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம், ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு அமைப்பு (UNICEF) மற்றும் அரசசார்பற்ற நிறுவனமான செரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து சிறுவர் பாதுகாப்பு இல்லங்களுக்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வேலைத்திட்டமாக மாற்றுப்பராமரிப்பும் மற்றும் அதற்கான குடும்பங்களை வலுப்படுத்தல் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரி.மதிராஜ், மாவட்ட உள சமூக இணைப்பாளர் பிரபாகர், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் பணியாற்றும் சிறுவர் உரிமை மேம்பாடு, சிறுவர் நன்னடத்தை, முன் பள்ளி அபிவிருத்தி ஆகிய துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்