மட்டக்களப்பில் சிறுவன் ஒருவனை அவரது தாய் தலைகீழாக கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய பெண் ஒருவரை இன்று செவ்வாய் கிழமை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராமம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தனது 7 வயது மகன் பீடி பயன்படுத்தியதாகவும் , இதன் காரணத்தினால் அவரது 35 வயது தாய் மகனை மரம் ஒன்றில் தலைகீழாக கட்டி வைத்து அடித்துள்ளார்.
காணொளியில் இருக்கும் குறித்த பெண் திருமணம் முடித்து கணவரால் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவதாக ஒரு திருமணம் முடித்து அந்த திருமணத்திலும் முறிவு ஏற்பட்டு இரண்டாவது கணவரையும் பிரிந்து வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் அவரது குழந்தைகளை அடித்து துன்புறுத்துவதாக அவரது இரண்டாவது கணவருக்கு ஊர் மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இதனால் தன்னுடைய பிள்ளையை மாத்திரம் தன்னிடம் தந்துவிடும்படி குறித்த பெண்ணின் கணவர் அவரிடம் கேட்டுள்ளார் எனினும் குறித்த பெண் பிள்ளையை தர முடியாது என மறுத்துள்ளார்.
குறித்த பெண்ணின் இரண்டாவது கணவர் புத்தளத்தில் வசித்து வரும் நிலையில் பிள்ளையை கேட்டு ஏறாவூரிற்கு வந்த போது அங்கு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின் மேஜையில் இருந்த மனைவியின் கைபேசியை அவருக்கு தெரியாமல் எடுத்து சென்றுள்ளார்.
அதன்பின் குறித்த கைபேசியில் பிள்ளையை அடித்து துன்புறுத்தும் காணொளியை அவர் அவதானித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரிணால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த பெண்ணை கைது செய்ய ஏறாவூர் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்