
மட்டக்களப்பில் சிறுமியை கடத்திய இளைஞன் உள்ளிட்ட இருவர் கைது
மட்டக்களப்பு – கொக்குவில் பகுதியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞன் உட்பட இருவர் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 18 வயதான காதலன் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் 47 வயதுடைய சிறிய தாயாரும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பகுதியில் உள்ள சிறுமி கடந்த 7ஆம் திகதி பாடாலைக்கு சென்ற நிலையில் அவர் வீடு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தனர்.
உறவினர்களின் முறைபாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த சிறுமியை அவரது காதலன் வாகரைப் பிரதேசத்திலுள்ள அவனது சிறியதாயாரின் வீட்டிற்கு கடத்திச் சென்று வைத்துள்ளதாக கண்டறியப்பட்டு நேற்று இரவு வாகரையில் சிறுமி தங்கவைக்கப்பட்ட வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதில் மீட்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
