மட்டக்களப்பில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் உள்ள திருநீற்றுக்காணி குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆரையம்பதி பொதுச் சந்தையில் பணிபுரியும் ராயு என்று அழைக்கப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான வீரக்குட்டி தவராஜ( வயது -57) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய இவர் இன்று காலை சடலாக மீட்கப்பட்டுள்ளார். குளத்திற்கு அருகில் பாதணிகள் காணப்பட்ட நிலையில் இப்பகுதியில் தேடுதல் நடத்திய நிலையில் இவர் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வலிப்பு நோயால் பாதிகப்பட்ட நிலையில் மதுவுக்கு அடிமையானவர் என, பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை , பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.