மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

 

மட்டக்களப்பு திசவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில், இன்று செவ்வாய்க்கிழமை காலை, கிணற்றிலிருந்து வயோதிப பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு தலைமையக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

71 வயதுடைய குறித்த வயோதிப பெண் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான நிலையில் இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்பு தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரனை அதிகாரி நஸீர், சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.