
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் லசந்தவின் நினைவு தினமும் கவனயீர்ப்பு போராட்டமும்
இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியிருந்தது.
மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



