மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட திரைப்பட வெளியீடு தொடர்பிலான ஊடக சந்திப்பு

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட திரைப்பட வெளியீடு தொடர்பிலான ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

கல்லடி கிரீன் கார்டின் விடுதியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு படுவாங்கரை வாழ் மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை பிரதிபலிக்கும் முகமாக அமைந்த விசுவல் ஆர்ட் நிறுவனத்தின் ஊடாக இயக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதி விஜயா திரையரங்கில் மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படமானது விஜயா திரையரங்கில் முதலாவது காட்சி 23 ஆம் திகதியும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் காலை 10.30, பிற்பகல் 2.30, மாலை 5மணிக்கு என்ற அடிப்படையில் மொத்தமாக இரண்டு நாட்களில் 6 கட்சிகளாக வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவல் ஆர்ட் நிறுவனத்தின் ஊடாக தயாரிக்கப்பட்ட போடியார் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான குடும்பநல வைத்தியரும் பேராசிரியருமான வைத்தியர் அருளானந்தம், கிழக்கு பல்கலைக்கழக சொக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட பேராசிரியர் சதாசண்முகநாதன், இயக்குனரான கோடீஸ்வரன், படத்தொகுப்பாளர் புஸ்பகாந், இசையமைப்பாளர் சங்கர்ஜன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்