மட்டக்களப்பில் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கி வைப்பு

இலங்கை கிரிக்கட் சபையும், இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள், பாடசாலை மாவட்ட அணிகள், மாவட்ட பயிற்சியாளர்கள், மாவட்ட கிரிக்கட் சங்கங்களுக்கு இன்று புதன்கிழமை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் கொழும்பில் உள்ள டன்சன் வெள்ளை அரங்கில் நாடளாவிய ரீதியில் 24 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் உபகரணங்கள் வழங்கும் விழாவினையடுத்த மட்டக்களப்பு கிரிக்கட் சங்கம் கிழக்கு மாகாண கிரிக்கட் சங்கத்தின் தலைவர் எம்.பி. ரஞ்சன், செயலாளர் விவேகானந்தராஜா பிரதீபன் தலைமையில் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மண்முனை பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன், அதிதிகளாக மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சுதாகரன், பிரதான கணக்காய்வாளர் ஜ.எம்.நியாஸ், மற்றும் மட்டு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எம்.ஜாவிட், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் ரி.ரவி, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.தங்கேஸ்வரன் ,

பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். சிறிதரன், கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் ரி. ஆனந்தரூபன் மற்றும் பாடசாலை அதிபர்கள், மட்டக்களப்பு கிரிக்கட் சங்க தலைவர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.