மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற இரத்த தான நிகழ்வு

மட்டக்களப்பில் இன்று செவ்வாய் கிழமை காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 1 மணி வரை இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியில் பணியாற்றிய அமரத்துவம் அடைந்த சி.சிவதர்சனின் ஓராண்டு நினைவாக இந்த இரத்த தான நிகழ்வு கிழக்கு மாகாண காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது பொது மக்கள் மற்று வங்கியில் பணி புரியும் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்