
-கிரான் நிருபர் –
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இன்று திங்கட்கிழமை காலை வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி பனி மூட்டத்தினால் சூழ்ந்து காணப்பட்டது.
கிரான்-கிண்ணையடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் கடும் பனி மூட்டம் நிலவியுள்ளது.
பனி மூட்டம் காரணமாக வாகன போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக, சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
காலை நேரத்தில் கடுமையான பனி மூட்டம் காணப்படுகின்றமையினால், வீதியில் பயணிப்போர் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு, வாழைச்சேனை பொலிஸ போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
