மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மகாவலி கங்கையின் மேல் பகுதி மற்றும் கிளை ஆறுகளின் நீர் மட்டம் உயர்வதால் கிளை ஆறுகளைக் கடப்பதும் நீராடுவதும் ஆபத்தை ஏற்படுத்தலாமென நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர், பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜிங்கங்கை, களுகங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் இன்று  உயர்ந்துள்ளது.

மேலும் மழை பெய்தால் அந்த கங்கைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலையால் எதிர்பாராதவிதமாக ஆறுகளின் நீர்மட்டம் உயருமென்பதால் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்