
மகளை கொடூரமாக கொலை செய்த போதை அடிமை
இந்தியா – மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசிக்கும் 37 வயதுடையவர் ராகேஷ் . தச்சு வேலை செய்யும் கூலித் தொழிலாளியான இவருக்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருந்தார். ராகேஷ் மதுபோதைக்கு தீவிர அடிமையானவர்.
ஏழ்மையான பொருளாதார சூழலை கொண்ட இவர் தினமும் குடித்து விட்டு குடும்பத்தில் தகராறு செய்து வந்துள்ளார். இதை பொறுக்க முடியாக அவரது மனைவி மூன்று வருடங்களுக்கு முன்னர் கணவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். மகளையும் கணவரிடமே விட்டு சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து தனது மகளுடன் ராகேஷ் வசித்து வந்த நிலையில், தொடர்ந்து இவர் மது பழக்கத்தை விடவில்லை, இதனால் வறுமையில் வாடிவந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக இவரின் 8 வயது மகள் தனது தந்தையிடம் சாக்லேட் வேண்டும், விளையாட பொம்மை வேண்டும் என கேட்டு வந்துள்ளார்.
ஆனால், ராகேஷ் வாங்கி தரவில்லை. இருப்பினும் சிறுமி சாக்லேட், பொம்மை வேண்டும் என அடம்பிடித்துள்ளார். இது இவருக்கு எரிச்சலும் ஆத்திரமும் தந்துள்ளது. தனது மகளை கடைக்கு அழைத்து செல்வது போல கூறி அருகே உள்ள பாழடைந்த கட்டடத்திற்கு கொண்டு சென்றுஇ சிறுமியின் தலையை அங்கிருந்த டைல்ஸ் மற்றும் கற்களை கொண்டு மோதி கொடூரமாக கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் பரவியதை தொடர்ந்து, அப்பகுதி போலீசார் மகளை கொடூரமாக கொலை செய்த போதை ஆசாமியை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
