
மகளின் திருமணத்திற்கு வங்கியில் சேகரித்த பணம் கறையானுக்கு இரை
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட பணத்தை கறையான் அரித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
மொரதாபாத்தில் வசிக்கும் அல்கா பதாக் என்பவர் சிறுதொழில் மற்றும் தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்து மகளின் திருமணத்திற்காக சேகரித்த 18 இலட்சம் ருபாய் பணத்தை வங்கியொன்றின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளார்.
இவ்வாறு வைக்கப்பட்டிருந்த பணத்தை கறையான் அரித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இதனால் அவர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
