பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள லெ ஃபொகா(Le Fauga) கிராமத்தில், தனது மகனின் ஆரம்பப் பள்ளி ஆசிரியையை கொலை செய்வதாக மிரட்டிய தந்தைக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வகுப்பில் மகன் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதைத் தொடர்ந்து ஆசிரியர் அவரை வேறு வகுப்புக்கு அனுப்பியிருந்த நிலையில், பள்ளிக்கு வெளியே காத்திருந்த தந்தை ஆசிரியையை கடுமையாக மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து ஆசிரியருக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார்.










