
போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது
மஹியங்கனை, செரானதொட்ட பகுதியில் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த கிரிபத்கொட அங்குலான பேருந்தில் நடத்துனராக கடமையாற்றும் 30 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவின் தலைமை அதிகாரி பொலிஸ் சார்ஜன்ட் ஜயசேகரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேகநபரிடம் இருந்து நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான 5 ஆயிரம் ரூபாய் எட்டு நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதுl குறித்த நாணயத்தாள்கள் அங்குலான பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரால் தமக்கு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
