போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

மொரட்டுவை- எகொட உயன பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எகொட உயன பகுதியை சேர்ந்த 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 நாணயத்தாள்கள், ஒரு பகுதி அச்சிடப்பட்ட ஐயாயிரம் ரூபாபோலி நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

விசாரணையின் போது பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு போலி நோட்டுக்களை அச்சிட்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்