
போலந்து பிரஜை பாணந்துறையில் சடலமாக மீட்பு
பாணந்துறை கடற்கரையில் நேற்று சனிக்கிழமை மாலை நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார்.
61 வயதுடைய போலந்து நாட்டு பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறை – தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த அவர், பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளார். இதன்போது, அவர் கடலில் மூழ்கியுள்ள நிலையில் ஹோட்டலின் உயிர் பாதுகாப்பு அதிகாரியால் மீட்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
