போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் வழமை போன்று இயங்கும் நுவரெலியா பேருந்து சேவை!

-நுவரெலியா நிருபர்-

இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை செயல்படுத்துவதாக அறிவித்த போதிலும், நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகிறது.

மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் நுவரெலியா டிப்போவில் எவரும் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளனர்

இதனால் பேருந்து சேவை பாதிக்கப்படாது எனவும் வழக்கமான நேர அட்டவணையின் கீழ் அரச பேருந்துகள் இயக்கப்படும் எனவும் நுவரெலியா போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவில் பணியில் ஈடுபடும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

மேலும் எந்தவித இடையூறும் இல்லாமல் வழக்கம் போல சேவை இடம்பெற்று வருகிறது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.