
போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
-கிரான் நிருபர்-
பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவனையிலிருந்து விடுதலையாக்கும் தேசிய நிகழ்ச்சி திட்ட த்தின் கீழ் போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இலங்கை பாதுகாப்பு படையின் கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்னவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை மாவட்டங்களுக்கு தலைமைத்துவம் வகிக்கும் 232 ஆவது காலால் படை பிரிகேட்டின் மேஜர் ஜெனரல் நிலன்த பிரேமரத்னவின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு .
கல்குடா வலயத்துக்குட்பட்ட புலிபாய்ந்தகல் மற்றும் திகிலிவெட்ட இரு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்களுக்கு தொப்பிக்கல 232 வது இராணுவத்தினரால் போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.
மதுபாவனையில் முதல் இடத்தைப்பெற்ற மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள் பாவனை, புகைத்தல் ஒழிப்பு தொடர்பில் பல விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் பாடசாலை மாணவர்களுக்கு, கிராம மட்டங்களுக்கு இடையிலும் பல்வேறு துறையினரால் நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எமது வீட்டில் புகைபிடித்தல், மதுபாவனை, போதைப்பொருள் பாவனையை இல்லாதொழித்து ஆரோக்கியமாக வாழ்வோம் என்று உலகலாவிய ரீதியில் ஆசிய கண்டத்தில் இலங்கை ஒரு முக்கிய போதைப் பொருள் மையமாக உள்ளது.இதனால் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கப் போகும் இளைஞர் யுவதிகளை போதைப் பொருளில் இருந்து விடுவித்து வளமான நாட்டை உருவாக்குவதே இவ் விழிப்புணர்வு செயலமர்வின் நோக்கமாகும்.
இதன்போது தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பி.தினேஸின் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கிரான் உதவி பிரதேச செயலாளர் சோ. யோகராசா, 232வது கட்டளைத்தளபதி பிரிக்கேடியர் அசித புஷ்பகுமார மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் மட்டக்களப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன் கேணல் சன்திக எஹெலேபொல,232 காலாட்படையின் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் இதுனில் பாலசூரிய, மேஜர் சன்தன வன்னினியக ,ஔடத கட்டுப்பாட்டு சபையின் விரிவுரையாளர் பி.தினேஸ் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மாணவர்கள் இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.



