போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் எடைபோடும் தராசுடன் ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
மஹியங்கனை அலேவெல பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் எடைபோடும் தராசுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அரவத்த மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் பொலிஸ் அதிகாரி ஒருவர் முகவர் போல் சென்று சந்தேக நபரிடம் போதைப்பொருள் கொள்வனவு செய்ய போது சந்தேக நபர் பிடிப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .
சந்தேக நபரிடம் 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் நியமித்த முகவருக்கு விற்பனை செய்த முற்பட்ட போது கைப்பற்றப்பட்டதாகவும் பின்னர் விசாரணையின் போது மேலும் 500 மில்லிகிராம் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு மேலதிக விசாரணை மேற்கொள்ள உள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்