
போதைக்கு அடிமையான தந்தை: தடியால் தாக்கிய மகன்
மொரகஹஹேன பகுதியில் தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் இன்று வியாழக்கிழமை தடியால் தாக்கி தந்தையை படுகாயப்படுத்திய மகன் கைது செய்யப்பட்டதுடன் தாக்குதலில் காயமடைந்த தந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடா உடுவ தளம், மல்பெரி வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர், சந்தேகநபரான மகன் 22 நாட்களாக வீட்டை விட்டு வெளியேறி நேற்று புதன் கிழமை இரவு வீடு திரும்பியுள்ளார்.காயமடைந்த தந்தை இன்று அதிகாலை மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதில் சந்தேகநபர் தந்தையின் கால்களிலும் கைகளிலும் தடியால் தாக்கியுள்ளார்.
இதில் கை, கால்கள் உடைந்து பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் சத்திரசிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
