போட்டியிலிருந்து விலகும் ஹேலி ஜென்சன்
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து மகளிர் அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஹேலி ஜென்சன் ((Hayley Jensen) பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிபர்டன் ஜான்ஸ்டோன் ஷீல்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டியின் போது ஹேலி ஜென்சன் உபாதைக்கு உள்ளானதன் காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளரான பிரான் ஜோனாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பென் சோயர் தெரிவித்துள்ளார்.