பொலிஸ் சார்ஜன்டின் வங்கி அட்டையை திருடிய கான்ஸ்டபிள்

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்டின் வங்கி அட்டையை திருடிய கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதுரேவெல, கல்லலெல்ல, குசும்கம பிரதேசத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அநுராதபுரம் நகரிலுள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் முறைப்பாட்டாளர் சார்ஜன்ட் பணம் எடுக்கும்போது, ​​சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் அதன் பின்னால் வரிசையில் நின்று இந்த வங்கி அட்டையை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபர் குறித்த அட்டையை பயன்படுத்தி 41000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்