
பொலிஸ் கட்டமைப்புடன் இணைக்கப்படும் தனியார் சிசிடிவி அமைப்புகள்
பொலிஸாரின் சிசிடிவி கமரா அமைப்புடன் பொதுமக்களால் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமரா அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தை பொலிஸ் தலைமையகம் ஆரம்பித்துள்ளது.
முதற்கட்டமாக கொழும்பு நகரில் இரண்டாயிரம் தனியார் சிசிடிவி கமராக்கள் பொலிஸ் கமரா அமைப்புடன் இணைக்கப்பட உள்ளன.
மேலும் இத்திட்டத்தில் சேர விரும்புபவர்களுடன் கலந்தாலோசித்து செயல்படுத்தப்படுகிறது.
கமராக்களின் வரம்பை விரிவுபடுத்துவதுடன், ஏனைய பகுதிகளில் உள்ள கமரா அமைப்புகளும் பொலிஸ் கமரா அமைப்புடன் இணைக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
