பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கேகாலை மாவனெல்லை பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பதிதொர பகுதியில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குறித்த சந்தேகநபர் ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

மேலும் அங்கிருந்த பெண் ஒருவரையும் தடுத்து வைத்து அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த 52 வயதுடைய சந்தேகநபர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு நபர் தேடப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் தாக்கியதில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்