-யாழ் நிருபர்-
யாழ்.அல்லைப்பிட்டியில் ஊர்காவற்துறை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது, உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள், சடலத்துடன் பதாகைகளை தாங்கியவாறு, “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது சடலம் நவாலி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்படுகிறது.
