பொலித்தீன் பையில் சுற்றி ஏரியில் வீசப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு (VIDEO)

-பதுளை நிருபர்-

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபான சாலை அருகே ஓடும் அருவியில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சிசுவின் சடலம் கிடப்பதை கண்ட மக்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.

அப் பகுதிக்கு சென்ற பொலிஸார் அங்கு பாதுகாப்பு வேலி அமைத்து சிசுவின் சடலம் பற்றி புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து ஹட்டன் நீதிமன்ற நீதிவான் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கைரேகைகள் பதிவு செய்ய உள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சிசு பொலித்தீன் உறையில் சுற்றப்பட்டு ஓடையில் வீசப்பட்டுள்ளது எனவும் சிசுவின் சடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.