
பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை
காலி, எல்பிட்டிய – பத்திராஜவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
ரந்தெனிய பகுதியில் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றிவரும் 51 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர், வீட்டிலிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
