பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் நடத்தப்படும் நிதி மோசடி குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாட்ஸ்அப் கணக்குகள் திருடப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளை மீட்டெடுக்க support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் https://telligp.police.lk வழியாக பொலிஸ் சைபர் குற்றவிசாரணை பிரிவில் புகார் அளிக்கலாமென குறிப்பிட்டுள்ளனர்.